Categories
அரசியல் மாநில செய்திகள்

சந்தேகமா இருந்தா நேர்ல வந்து…. மின்கம்பியை பிடிச்சி ஆய்வு பண்ணுங்க…. செல்லூர் ராஜுக்கு அழைப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இதற்கு மத்தியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அணில்களால் சில சமயம் மின்வெட்டு  கூறினார். இது அதிமுகவினரிடையே பேசுபொருளாக மாறிவிட்டது. அதன்படி செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு, அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த அணில்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு படையெடுத்து வந்து மின்கம்பி மீது ஓடி வருவதை கண்டுபிடித்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று விமர்சனம் செய்தார்.

மேலும் தங்களது ஆட்சியில் மின்வெட்டு என்பது இருந்ததே இல்லை. திமுக ஆட்சிக்கு வந்ததோ  அப்பொழுது இருந்த மின்வெட்டு அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் தக்க  வருகிறார். இந்நிலையில் இன்று நாகை மாவட்டத்தில் அணில் ஓடியதால் மின்கம்பிகள் உரசி மின்வெட்டு  ஏற்பட்டது. இதைக் குறிப்பிட்டு டுவீட் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, செல்லூர் ராஜூ நேரில் வந்து மின் கம்பிகளை பிடித்து ஆய்வு செய்ய அழைப்பு விடுத்துள்ளார்.

 

Categories

Tech |