Categories
உலக செய்திகள்

சந்தைக்குள் புகுந்த லாரி… சக்கரத்தில் சிக்கி நசுங்கிய மக்கள்… 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

நைஜீரியாவில் சந்தைக்குள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புகுந்த லாரியில் சிக்கி 16 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கின்ற ஓண்டோ என்ற மாகாணத்தில் அகுன்பா அகோகோ நகரில் பிரபலமான சந்தை ஒன்று இருக்கின்றது. நேற்று முன்தினம் தங்கள் வீடுகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் அந்த சந்தையில் திரண்டனர். அச்சமயத்தில் சந்தை அமைந்திருக்கின்ற சாலையில் மிக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தந்தைக்கோ புகுந்துள்ளது. அதனைக் கண்ட மக்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர்.

ஆனால் லாரி வேகமாக வந்ததால் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் லாரியில் சிக்கி நசுங்கினர். அதனால் அங்கு பெரும் பரபரப்பு மற்றும் பீதி ஏற்பட்டது. அந்தக் கொடூர விபத்தில் பெண்கள் உட்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்ததற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |