ஈரோடு உழவர் சந்தையில் மனித கை விரல்களைப் போன்ற உருவம் கொண்ட கேரட்டை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் கோபி சாலையில் உழவர்சந்தை ஒன்று செயல்பட்டு வருகின்றது. அங்கு விவசாயிகள் குழு மூலமாக ரமேஷ் என்பவர் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். அவர் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் உறவினர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கேரட் சாகுபடி செய்து வந்துள்ளார். அதில் விளைந்த கேரட்டுகளை அறுவடை செய்து நேற்று சத்தியமங்கலம் உழவர் சந்தைக்கு ரமேஷ் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்.
அவர் கொண்டுவந்த கேரட்களில், ஒரு கேரட் வினோதமான மனித கை விரல்களைப் போன்ற இருந்துள்ளது. அது ஆரஞ்சு நிறத்தில் நான்கு விரல்களை நீட்டி அது போன்று இருந்தது. அந்த சந்தைக்கு காய்கறி வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் அனைவரும் வித்தியாசமான உருவத்தில் இருந்த அந்த கேரட்டை பெரும் அதிசயத்துடன் பார்த்துச் சென்றார்கள்.