ராக்கெட் தாக்குதலில் 9 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா நாட்டிற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடிக்கிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் துருக்கி ராணுவத்தினரின் உதவியோடு சிரிய நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். இந்நிலையில் அல்பாப் நகரில் ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு சிரிய ராணுவத்தினர் ராக்கெட் தாக்குதல் நடத்துனர்.
இந்த தாக்குதலில் குழந்தை உட்பட 9 பேர் பலியானதோடு, 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக துருக்கி ராணுவத்தினர் நடத்திய வான் தாக்குதலுக்கு பதிலடியாக சிரியா ராணுவத்தினர் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.