Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

சந்தோஷ் சிவன் இயக்கத்தில் “சென்டிமீட்டர்”…. வித்தியாசமான நடிப்பில் மஞ்சு வாரியர்… வெளியாகிய படத்தின் டிரைலர்….!!!!

மஞ்சு வாரியரின் நடிப்பில் உருவாகியுள்ள சென்டிமீட்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருகின்றார் சந்தோஷ் சிவன். இவர் தற்பொழுது சென்டிமீட்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் மலையாள நடிகையான மஞ்சுவாரியர், யோகிபாபு, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தை ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்பானது சென்ற வருடம் தொடங்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தின் டிரைலரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது. இதில் மஞ்சு வாரியர் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

Categories

Tech |