Categories
உலக செய்திகள்

சனா மீது தாக்குதல் நடத்திய சவுதி தலைமையிலான கூட்டுப்படை…காரணம் என்ன? வெளியான வீடியோ காட்சிகள் ..!!

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் நாட்டின் தலைநகரமான சனா மீது வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமன் ஹவுத்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி வெளியிட்ட அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று சனாவில் நடத்தப்பட்ட வான்வழி  தாக்குதலில் ஏவுகணைகள் தயாரிக்கும் பணிமனை மற்றும் வெடிமருந்து கிடங்கை தாக்கி அழித்ததாக தெரிவித்துள்ளது.

ஏனென்றால் ,வரவிருக்கும் நாட்களில் சவுதி மீது ஹவுத்தி நடத்தவிருக்கும் தாக்குதலை தடுப்பதற்காகவும் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாப்பதை நோக்கமாக கொண்டும்  இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக  என்று சவுதி தலைமையிலான கூட்டுப்படை கூறியுள்ளது.

Categories

Tech |