சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இன்று நந்தீஸ்வரர் மற்றும் கைலாசநாதருக்கு 11 வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமியை தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் உலகநாயகி சமேத உலகநாதசாமி திருக்கோவிலிலும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.