Categories
ஆன்மிகம் இந்து

சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து தப்பிக்கும் ரகசியம்…. எப்படி தெரியுமா..? இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!

சனீஸ்வரன், சனி பகவான் என்ற பெயர்களில் அழைக்கப்படும் தெய்வமானவர் நவக்கிரகங்களில் ஒருவராக இருந்து சங்கடம் தீர்க்கிறார். இவர் சூரிய தேவன் – சாயா தேவி தம்பதியினருக்கு பிறந்தவர். பொதுவாக காகத்தினை வாகனமாக கொண்டவர். இவருடைய கால் சிறிது ஊனமென்றும், அதனால் மெதுவாக, மந்தமாக நடப்பவர் என்றும் கூறப்படுகிறது. நவக்கிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற பெருமைக்குறியவர்.

‘சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை’ என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பலசாலியாக, வசதி படைத்தவராக இருந்தாலும் கண்ணிமைக்கும் நொடியில், அனைத்தும் மணல் கோட்டை போல சரிந்துவிடும். அதே வேளையில் சனீஸ்வரரால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருக்குமேயானால், அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனீஸ்வர பகவானுக்கு உண்டு.

இது போன்ற பல்வேறு காரணங்களால் சனி என்ற பெயரைக் கேட்டலே நடுங்காதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த பிறப்பே இன்ப துன்பத்தை சரிக்கு சமமாக அனுபவிக்கத்தான் என்பதை உணர்ந்தவர்களுக்கு சனீஸ்வரர் அருள் பாலித்து நல்ல வழி காட்டுகிறார். செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப அள்ளியும், கிள்ளியும் கொடுக்கிறார் சனீஸ்வரர் என்பார்கள். அந்த வகையில், சனீஸ்வரரின் பிடியில் இருந்து தப்பிக்க, கெடு பலன்களை குறைக்க நம் கையிலேயே பரிகாரங்கள் உள்ளது.

தினமும் உலர் திராட்சையை நம்மால் முடிந்த அளவுக்கு காலையில் காகத்திற்கு அளிக்க வேண்டும். உயிரே போக வேண்டும் என்று விதி இருந்தாலும், அதையே மாற்றக்கூடிய சக்தி இதற்கு உண்டு. இதை தவிர நாம் ஏற்கனவே கூறியபடி, வன்னி மர விநாயகருக்கு பச்சரிசிமாவு படைத்தல், சனிக்கிழமைகளில் விரதம் இருந்து எள் கலந்த தயிர்சாதம் படைத்தல் ஒரு மிகப்பெரிய கவசம் போல் பாதுகாக்கும்.

காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும் போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வு சமாதானத்தை அளிக்கும். வாழ்வில் திடீரென்று நடக்கும் அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண் பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது. செய்வினை கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள், புத்திரசந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான்.

உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல, அற்புதமான ஜீவ ராசி – காக்கை இனம் தான்.

குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலி பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம். தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க, தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்த காணுப் பிடி பூஜையைச் செய்கிறார்கள்.

திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்ரான்னங்களை ஐந்து, ஏழு, ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து, காக்கைகளை “கா…கா…’ என்று குரல் கொடுத்து அழைப்பார்கள். அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்துவரும். அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.

வாழை இலையில் உள்ள அன்னங்களைச் சுவைக்கும். அப்படிச் சுவைக்கும் போது அந்தக்காக்கைகள் “கா…கா…’ என்று கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும், அந்தவாழை இலையில் பொரி,
பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.

இதனால் உடன்பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள். மறைந்த முன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.
இதனால் பித்ருக்களின் ஆசிகிட்டும் என்பது நம்பிக்கை. மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்திப்படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.

காக்கை சனி பகவானின் வாகனம். காக்கைக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தருமாம். காக்கைகளில் நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கை என சில வகைகள்உண்டு. காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காணமுடியாது.
எம தர்மராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம்.

அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம். எமனும் சனியும் சகோதரர்கள்ஆவர். அதனால், காக்கைக்கு உணவிடுவதால் ஒரே சமயத்தில் எமனும் சனியும் திருப்தியடைவதாகக் கருதப்படுகிறது.

வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிடவேண்டும். எனவே,

காக்கை வழிபாடு செய்வதால் சனிபகவான், எமன் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தினைப் பெற்று மகிழ்வுடன் வாழலாம்.

Categories

Tech |