தொலைக்காட்சிகளுக்கான கடந்த வார டி.ஆர்.பி விவரங்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் பல வருடங்களாக தொலைக்காட்சி வரிசையில் முன்னிலையில் இருப்பது சன் தொலைக்காட்சி . இதையடுத்து சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி , ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகள் வந்தன. தொலைக்காட்சிகளை வரிசைப்படுத்துவது அதன் டி.ஆர்.பி விவரங்களை வைத்து தான்.
இந்நிலையில் கடந்த வாரம் டி.ஆர்.பி யில் சன் தொலைக்காட்சி முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளது . மேலும் விஜய் தொலைக்காட்சி ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. இதனை சன் டிவி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.