ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து சன்னிலியோன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜிபி முத்து கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியபோது சன்னிலியோன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார்.
நான் இதுவரை டிக் டாக் மற்றும் குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்றும் இந்த திரைப்படத்தை நன்றாக ஓடச்செய்து எனக்கு ஆதரவளிக்க வேண்டும். கேரக்டரின் பெயரை கேட்டாலே சிரிப்பு வரும் என்று அவர் பாணியிலே பேசிய விதம் பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது.