பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு இந்தியை தாண்டி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழிலும் சன்னி லியோன் படங்களில் நடித்து வருகிறார். தற்போது கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இளைஞன் ஒருவன் Dk என்ற பெயரில் சிக்கன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நபர் சன்னி லியோனின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். இந்நிலையில் தனது கடையில் விற்கப்படும் கோழி கறிகள் வாங்கும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு 10% தள்ளுபடி என்று அறிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு அவர் மூன்று நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார். அது என்ன என்றால் நடிகை சன்னி லியோனை பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பின் தொடர வேண்டும். சன்னி லியோனின் 10 புகைப்படங்கள் செல்போன் கேலரியில் இருக்க வேண்டும். சன்னி லியோனின் அனைத்து சமூக வலைதளங்களிலும் அவரது பதிவுகளுக்கு லைக் செய்திருக்க வேண்டும். இதுதான் அந்த சிக்கன் கடை உரிமையாளர் போட்ட நிபந்தனை. அப்படி செய்தவர்களுக்கு கோழிக்கறியை 10% தள்ளுபடியில் வழங்கிவருகிறார்.