சன்னி லியோன் நடிக்கும் புதிய தமிழ் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் இவர் வீரமாதேவி என்ற ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. தற்போது நடிகை சன்னி லியோன் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் இந்த படத்தில் சதீஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து, தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை சசிகுமார் மற்றும் வீரசக்தி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘ஓ மை கோஸ்ட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மிரட்டலான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.