கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஹோமன்னஹேலி என்ற கிராமத்தில் சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டி.கே சிக்கன் சென்டர் சார்பாக மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. மேலும் சன்னி லியோன் ரசிகர்களுக்கு சிக்கன் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த மே 13ஆம் தேதி சன்னி லியோன் பிறந்தநாளை முன்னிட்டு இது நிகழ்ந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த சன்னி லியோன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஓ மை கடவுளே, என்னால் நம்ப முடியவில்லை. நானும் எனது ரத்தத்தை தானம் செய்வேன், அனைவருக்கும் மிக்க நன்றி. நீங்கள் என்னை ஸ்பெஷலாக விரும்புகிறீர்கள். நான் உங்களை நேசிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.