ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஐதராபாத் அணி போட்டியிட்டது. இதில் ராஜஸ்தான் அணி 210 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்தது. இந்த அணியின் கேப்டனான சாம்சன் அதிகமாக 55 ரன்கள் அடித்தருந்தார். ஐதராபாத் அணியானது 149 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
சன்ரைசஸ் ஐதராபாத் அணியில் மார்க் ராம் 57 ரன்களும் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 40 ரன்களும் எடுத்திருந்தனர். இந்நிலையில் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு அபராதமாக ரூபாய் 12 லட்சம் விதிக்கப்பட்டது.