நயன்-விக்கி லேட்டஸ்ட் ஹனிமூன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சென்ற ஏழு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சென்ற ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார்கள். பின் ஒரு வாரம் கழித்து தாயகம் திரும்பி இருவரும் அவரவர்களின் வேலைகளில் ஈடுபட்டார்கள்.
இந்த நிலையில் தற்போது இரண்டாவதாக ஸ்பெயினிற்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். தற்பொழுது பார்சிலோனாவில் எடுக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றார் விக்னேஷ் சிவன். அண்மையில் பார்சிலோனா தெரு வீதிகளிலும் சந்துக்களிலும் இருவரும் ரொமான்டிக்காக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் தற்போது சன் செட்டை கண்டுகளிக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.