சன் டிவியில் ஆரம்பமாகும் புதிய சீரியலில் பிரபல நடிகை நடிக்கவுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் புகழ் திருச்செல்வன் இயக்கத்தில் “எதிர்நீச்சல்” சீரியல் தயாராகி வருகின்றது. இந்த சீரியல் வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
இந்த சீரியலில் புதிய மற்றும் பழைய நடிகர்கள் நடிக்கிறார்கள். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சித்தி, கோலங்கள், சிதம்பர ரகசியம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த பாம்பே ஞானம் அவர்கள் எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கிறாராம். கடந்த 10 ஆண்டுகளாக எந்த சீரியலும் நடிக்காத இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சீரியலில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.