டிக்டாக் புகழ் கேப்ரியல்லா சன் டிவியில் சீரியல் நடிகையாக நடிக்க உள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேப்ரில்லா செல்லஸ் டிக் டாக் மூலம் பிரபலமானவர் ஆவார். இதையடுத்து கேப்ரியல்ல விஜய் டிவி கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அடுத்தபடியாக ஐரா என்ற தமிழ் திரைபடத்தில் சிறு வயது நயந்தாரவாக நடித்து பிரபலமானார். இந்நிலையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சுந்தரி என்ற சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.