சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பூவேஉனக்காக சீரியலில் நடிகர் அசீம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . அந்த வகையில் தற்போது சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பூவே உனக்காக. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக நடிகர் அருண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில் பூவே உனக்காக சீரியலில் அருண் நடித்த கதிர் கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் அசீம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அசீம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .