சந்திரலேகா சீரியல் இன்றுடன் 2000 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பல சீரியல்கள் டி.ஆர்.பி-யில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. சமீபத்தில் கொரோனா காரணமாக ஒரு சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் ஒரு சில சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பல புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சன் டிவியில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சந்திரலேகா. இந்த சீரியலில் ஸ்வேதா கதாநாயகியாக நடிக்கிறார். இந்நிலையில் இன்றுடன் சந்திரலேகா சீரியல் 2000 எபிசோடுகளை கடந்துள்ளது. மிகப்பெரிய சாதனை படைத்த இந்த சீரியல் குழுவினருக்கு ரசிகர்களும், பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.