சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி சீரியல் பெங்காலி மொழியில் ரீமேக்காக உள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது . கொரோனா ஊரடங்கு முடிந்ததில் இருந்து பல புதிய சீரியல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அப்படி புதிதாக தொடங்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சுந்தரி. ஒரு கருப்பு நிற பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் குறித்த ஒரு சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுந்தரி சீரியல் விரைவில் பெங்காலி மொழியில் ரீமேக்காக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் .