தமிழ் சின்னத் திரையில் மிகவும் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் சன் டி.வி. இதில் காலை முதல் இரவு வரை ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக சில தொடர்கள் 1000, 2000 எபிசோடுகளை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் சிலர் சீரியல்களுக்கு பெரிய ஆதரவு கொடுத்துள்ளனர்.
இதனிடையில் சந்திரலேகா சீரியல் பல ஆண்டுகளாக ஓடுகிறது. இப்போது சன் டி.வி-யில் டிஆர்பியில் டாப்பில் இருந்துவந்த ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு ஒரு சோகசெய்தி வந்துள்ளது. அதாவது, இந்த தொடர் விரைவில் முடிவுக்குவர இருக்கிறதாம். இதை கேட்ட ரசிகர்கள் ரோஜா தொடர் முடிவுக்கு வருகிறதா, வேண்டாம் என்று சோகமாக கமெண்ட் செய்துவருகின்றனர்.