விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் ரஜினி பார்த்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது நேற்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
Super Star #Rajinikanth is watching #Beast now in Sun Tv office…
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 13, 2022
இந்நிலையில் பீஸ்ட் திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் ரஜினிகாந்த் பார்த்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. நெல்சன் திலீப்குமார் விஜய்யின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியின் தலைவர் 169-வது படத்தை இயக்கவுள்ளார் குறிப்பிடத்தக்கது.