பீஸ்ட் படத்தின் அன்சீன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சன் பிக்சர்ஸை விளாசி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது வெளியாகி கொண்டிருக்கின்ற நிலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி இத்திரைப்படம் ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் விஜய் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் போட்டோவை சன் பிக்சர்ஸ் அன்சீன் புகைப்படம் என கேப்ஷன் கொடுத்து நேற்று இணையத்தில் பதிவிட்டு இருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்களோ இன்னும் படமே ரிலீஸாகல அதுக்குள்ள அன்சீன் புகைப்படமா என சன் பிக்சரை விளாசி வருகின்றது. வந்ததே நாலஞ்சு ஸ்டில்கள் தான். அதுல என்ன அன்சீன் ஸ்டில் என்றும், அன்ரிலீஸ்டு ஸ்டில் என்றும் சொல்ல வேண்டியது தானே” என சாடி வருகின்றனர்.