Categories
தேசிய செய்திகள்

சபதம் எடுத்து….. 22 வருஷமா குளிக்காமல் இருக்கும் முதியவர்….. அதுவும் எதுக்காக தெரியுமா?….

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் பகுதியை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் தான் தரம்தேவ் ராம். தற்போது 62 வயதாகும் இவர் 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். 1975 ஆம் ஆண்டு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்த இவர் 1978 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எல்லா மனிதர்களைப் போல மனைவி, குழந்தைகள் என இல்லற வாழ்க்கையில் வாழ்ந்து வந்த இவருக்கு திடீரென ஒரு சிந்தனை தோன்றியது. 1987 ஆம் ஆண்டு விலங்குகள் கொல்லப்படுதல், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருதல் உள்ளிட்ட அட்டூழியங்களை பார்த்து இவர் இதெல்லாம் ஏன் நடக்கின்றது என்று சிந்தித்துள்ளார்.

பின்னர் இந்த சிந்தனைக்கு பதில் வேண்டி சாமியார் ஒருவரை அனுப்பியுள்ளார். அவரோ இவரை தனது சிஷ்யனாக சேர்த்து கடவுளை பின்பற்று அறிவுறுத்தியுள்ளார். எனவே இவரும் அந்த சாமியாரை தனது குருவாக ஏற்றுக்கொண்டு வழிபடத் தொடங்கினார். இதனால் தனது வேலையை 2000 ஆண்டு விட்டார். இருப்பினும் அவரது குடும்பத்தார் அவரை வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் மீண்டும் அவர் வேலைக்கு சென்றார். ஆனால் அவரால் நீண்ட காலம் அங்கு இருக்க முடியவில்லை. பக்தியில் மூழ்கி இருந்த அவர் சமுதாயத்தின் நடைபெறும் குற்றத்தைக் கண்டு சாப்பிட மாட்டேன் என்றும், குளிக்க மாட்டேன் என்றும் கடவுள் முன்பாக சபதம் எடுத்திருந்தார் .

இது அறிந்த அவரது தொழிற்சாலை மேனேஜர் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார். மேலும் வேறு வேலை பார்த்து வந்தால் சாப்பிட மட்டும் செய்தார். இருப்பினும் தனது 40 ஆவது வயதில் குளிக்க கூடாது என்று முடிவெடுத்த இவர் தற்போது வரை குளிக்காமல் சபதத்தை கடைபிடித்து வருகிறாராம். மேலும் 2003 ஆம் ஆண்டு இவரது மனைவி இறந்த போதும், விபத்தில் தனது மகன் இறந்த போதும் கூட அவர் குளிக்கவில்லையாம். கடந்த 22 ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக இவருக்கு இதுவரை உடல்நிலை சரியில்லை என்று இருந்ததே இல்லை என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Categories

Tech |