நடிகர் சிம்பு சபரிமலைக்கு கிளம்பிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்புவிற்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம். இவர் சமூகவலைத்தள பக்கத்தில் தான் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்களையும் , தனது புதிய போட்டோஷூட்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார். இவர் நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் தயாராகியுள்ளது . தற்போது சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடக்கிறது . இதையடுத்து சிம்பு நடிக்கவுள்ள ‘பத்து தல’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை 10 முன்னணி இயக்குனர்கள் இணைந்து வெளியிட்டனர் .
சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை அணிந்தார். இந்நிலையில் தற்போது அவர் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு கிளம்பியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . கடந்த வருடமும் சிம்பு சபரிமலைக்கு சென்று வந்தவுடன் உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் . இதனால் வருகிற 2021 ஆம் ஆண்டு அவருக்கு சிறப்பாக அமையும் என ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.