சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து டிச- 3, 10, 17, 2,4 31, ஜனவரி- 7, 10, 12, 14 தேதிகளில் முன்பதிவு சிறப்பு ரயில்(எண் 06007) இயக்கப்படும்.(மாலை 4 க்கு புறப்படும்) என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேபோல கொல்லத்திலிருந்து டிசம்பர் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 11, 13, 16 தேதிகளில் (காலை 11:30 மணிக்கு புறப்படும்) சென்னைக்கு (எண்-(06008) ரயில்கள் இயக்கப்படும்.