கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு கம்பியில் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்திலிருந்து சில ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு காரில் சென்றுள்ளனர். இதனையடுத்து சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் காரில் சித்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அந்த காரை நவீன்(27) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தம்மனம்பட்டி பகுதியில் சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் நவீன், காரில் வந்த விஜயகுமார், 2 சிறுமிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு வேடந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து பற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.