சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவசம்போர்டு தனலட்சுமி வங்கியுடன் இணைந்து இந்த வசதியை செய்துள்ளது. இதன் வழியாக இனி பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும். மேலும் பக்தர்களுக்கு 9495999919 என்ற எண் மூலம் கூகுள் பே வழியாக காணிக்கை செலுத்த முடியும் என்று அறிவித்துள்ளது.