சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகின்ற ஐப்பசி மாத பூஜைக்கு தினம்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்போது மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் வழிபாட்டு தளபதியின் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் மாதம் தொடங்க உள்ள மண்டல பூஜைக்கு தினந்தோறும் ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலையில் வருகின்ற ஐப்பசி மாதம் தொடங்கும் பூஜைக்கு தினந்தோறும் 250 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து வருகின்ற 14ஆம் தேதி சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். அவ்வாறு வருகின்ற பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் எடுத்து வரவேண்டும். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் நிலக்கல்லில் ஆன்டிஜென் பரிசோதனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி மற்ற வழிபாட்டுத் தலங்களில் நாளொன்றுக்கு 20 பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் எனவும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு விழா காலங்களில் அந்தந்த வழிபாட்டு தலங்களில் இருக்கின்ற வசதிகளுக்கு பொறுத்து 40 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது