சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் 18-ஆம் படி வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு செல்கின்றனர். இந்நிலையில் கோவிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது 18-ஆம் படி வழியாக ஓரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள் என ஒரு மணி நேரத்தில் 4,800 பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுப்பப்படுகின்றனர். மேலும் இது குறித்து தேவஸ்தானம் கூறியதாவது. ஒரு நாளைக்கு சாமியை தரிசனம் செய்வதற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் இன்று 90 ஆயிரத்து 827 பக்தர்கள் சாமியை தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளது.