சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தினம்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிடுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் புக்கிங்கில் 90 ஆயிரத்திற்கும் மேல் ஆன்லைன் புக் செய்வோரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று வதந்தி பரவியது.தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் டிசம்பர் 20ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக அளவில் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதால் மூன்று நாட்கள் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் வழக்கம் போல் புக்கிங் செய்யலாம், எந்த கட்டுப்பாடும் இல்லை என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.