Categories
ஆன்மிகம் இந்து மாநில செய்திகள்

சபரிமலையில் இன்று மாலை மகர ஜோதி தரிசனம் : மகர விளக்கு விஷேச பூஜை ..

கேரள மாநிலத்தின் சபரிமலை ஸ்வாமி ஐயப்பன் திருக் கோவிலில் இன்று மகர விளக்கு பூஜை நடைபெற இருக்கின்றது.

சபரிமலை திருக்கோவிலில், மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்ற வைபவமாகும். எனவே சபரி மலையில், பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2 ஆயிரம் காவலதுறையினர்கள் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றார்கள்.

சபரி மலையில் மகர விளக்கு பூஜைக்கு வேண்டி டிசம்பர் மாதம் 30 -ம் தேதியன்று, சபரிமலை ஐயப்பன் சன்னதிதான நடை திறக்கப்பட்டது.

மகரவிளக்கு பூஜை நிகழும் தருணத்தில், சபரி மலையில் அமைந்து உள்ள, பொன்னம்பலம் மேட்டில், மகர ஜோதி தரிசனம் கிடைக்கப்பெறும் வைபவம் நிகழும்.

சுவாமி ஐயப்பன் ஜோதி வடிவமாக, காட்சி அளிப்பதாக, அனைவராலும் நம்பப்படுகின்றது. மகரவிளக்கு பூஜைக்கு முன் மகர சங்கராந்தி சிறப்பு பூஜையும் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |