சபரிமலையில் இந்த வருடம் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடை திறக்கப்பட்டது. இதனையடுத்து 16ஆம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மீண்டும் இன்று முதல் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நிகழ்வு நடைபெற உள்ளது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.