சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் தங்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே சுமார் 8 யானைகள் கூட்டமாக வந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்தபடி ஒடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், ஒலி எழுப்பியும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.
Categories