Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில் பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் கோயிலுக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சபரிமலையில் நாளை முதல் பக்தர்கள் நேரடியாக நெய்யபிஷேகம் செய்யலாம் என்று தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. எருமேலியிலிருந்து பாரம்பரிய பாதையான சபரிமலைக்குச் செல்லும் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருவழி பாதையும் நாளை முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பக்தர்களின் எண்ணிக்கை தினமும் 45 ஆயிரத்திலிருந்து 60 ஆக அதிகரிக்கும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் சபரிமலை பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |