நாட்டின் கொரோனா தொற்று பரவல்களின் தடுப்பு நடவடிக்கையாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை தினந்தோறும் முன்பதிவு செய்யும் 35,000பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்கு நிலக்கல் உள்பட சில பகுதிகளில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தினசரி பக்தர்களின் எண்ணிக்கையானது நேற்று முதல் 45,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 40,000 பேர் ஆன்லைன் மூலமும், 5,000 பேர் உடனடி முன்பதிவு மூலமும், சாமி தரிசனம் செய்யலாம். இதையடுத்து கனமழை காரணமாக நீலிமலை பாதை சேதமாகி உள்ளது. இந்தப் பாதை பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பயன்படும். இந்த பாதை விரைவில் சீரமைக்கப்பட்டு திறக்கப்படும் என்று தேவசம் போர்டு தலைவர் ஆனந்தகோபன் தெரிவித்துள்ளார்.