Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள் விழாக்கள்

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு….. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதி…!!!

கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு  திருவிழாவை ஒட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14ம் தேதி திறக்கப்பட்டு, கடந்த 28ஆம் தேதி அடைக்கப்பட்டது. இந்நிலையில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வரும் 14ஆம் தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெறும்.

இதனைதொடர்ந்து 18 ஆம் தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்நிலையில் நாளை முதல் 18ஆம் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், சபரிமலை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |