சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டு வருகிறார்கள். அதன்படி சபரிமலை கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. நாளை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறுகிறது. பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். வழக்கம்போல ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலங்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.