தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் கோவிலுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது சபரிமலைக்கு பக்தர்கள் அனைவரும் மாலை அணிவித்து விரதம் இருந்து வருகின்றனர். மேலும் வருகின்ற டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கூடிய வகையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில், சபரிமலை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கொல்லம், சென்னை எழும்பூர் மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்களில் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இருந்து வருகின்ற டிசம்பர் 3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி-7, 10, 12, 14 ஆகிய தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். அதன்பிறகு கொல்லத்தில் இருந்து டிசம்பர்-5, 12, 19, 26 மற்றும் ஜனவரி-2, 9, 11, 13, 16 ஆகிய தேதிகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடையும்.
அதனை போல சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பர் 23ம் தேதி மாலை 3.30 மணிக்கு புறப்படும் நாகர்கோயிலுக்கு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு சென்றடையும். அதன்பிறகு வருகின்ற 24 ஆம் தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.20மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மேலும் வருகின்ற 26ம் தேதி நாகர்கோயிலில் இருந்து மாலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதன்பிறகு 27ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.20 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.