Categories
தேசிய செய்திகள்

சபரிமலை கோயில் நடை திறப்பு… யாருக்கெல்லாம் அனுமதி…?

தமிழ் புத்தாண்டு, விஷு பண்டிகை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் தரிசனம் செய்வதற்காக  ஏப்ரல் 18 வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.  நாளை முதல் வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை முதல் ஏப்ரல் 18 வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களில் தினமும் 10 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |