கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நாளை நடைபெறுகிறது. இந்தவருட மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவம்பர் 15-ஆம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 16-ஆம் தேதி முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கின. அன்று முதல் தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை, நெய்யபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் 41-வது நாள் நீண்ட மண்டல கால பூஜை நாளை பிரசித்திபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.
மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டதுவரப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை 6.15 மணிக்கு இந்த தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானத்தை அடைந்தது. பின்னர் ஐயப்பன் விக்ரகத்தை தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் இந்த தீபாராதனை காண்பதற்காக சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நாளை பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் பகல் 12.15 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும். பின்னர் கோவில் நடை சாத்தப்படும் மாலை 4 மணி அளவில் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். அதன் பின்னர் 29ஆம் தேதி வரை 3 நாட்கள் கோவில் நடை சாத்தப்பட்டிருக்கும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மண்டல பூஜையை மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சபரிமலையில் ஜனவரி 14-ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகர ஜோதி தரிசனமும் மகர விளக்கு பூஜையும் நடைபெறும். மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும். 30-ஆம் தேதி முதல் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.