பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணி அளவில் நடை திறக்கபடுகிறது. மேலும் தீப ஆராதனை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுடன் இரவு 11:30 மணியளவில் மீண்டும் நடை சாத்தப்படுகிறது. இந்த மகர விளக்கு பூஜையின் போது 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கான முன்பதிவு பக்தர்கள் செய்து கொள்ளலாம். இன்று முதல் வருகிற ஜனவரி 20-ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.