சபரிமலை செல்லும் பக்தர்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது சபரிமலை சீசன் என்பதால் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சபரிமலைக்கு மாலை போட்டு சென்று வருகின்றனர். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
* காக்கிநாடா-கொல்லம் (வண்டி எண்: 07139) இடையே இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.35 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காக்கிநாடா (07140) இடையே நாளை மறுதினம் (ஞாயிறுக்கிழமை) அதிகாலை 2.30 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
*காச்சிகுடா-கொல்லம் (07141) இடையே ஜனவரி மாதம் 3-ந்தேதி மற்றும் 10-ந்தேதி மாலை 4.20 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07142) இடையே ஜனவரி மாதம் 5-ந்தேதி மற்றும் 12-ந்தேதி அதிகாலை 12.45 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* ஜதராபாத்-கொல்லம் (07117) இடையே ஜனவரி மாதம் 4-ந்தேதி மற்றும் 11-ந்தேதி மதியம் 2.10 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-ஜதராபாத் (07118) இடையே ஜனவரி 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கும், சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* நாந்தேடு-கொல்லம் (07137) இடையே ஜனவரி 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி காலை 9.45 மணிக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* கொல்லம்-திருப்பதி (07506) இடையே ஜனவரி 8-ந்தேதி மற்றும் 15-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* காச்சிகுடா-கொல்லம் (07135) இடையே ஜனவரி மாதம் 5-ந்தேதி மற்றும் 12-ந்தேதி அதிகாலை 5.30 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07136) இடையே ஜனவரி 6-ந்தேதி மற்றும் 13-ந்தேதி மாலை 5.10 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* செகந்திராபாத்-கொல்லம் (07109) இடையே ஜனவரி 7-ந்தேதி மற்றும் 14-ந்தேதி இரவு 7.30 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07110) இடையே ஜனவரி 9-ந்தேதி மற்றும் 16-ந்தேதி அதிகாலை 2.30 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* செகந்திராபாத்-கொல்லம் (07133) இடையே ஜனவரி 8-ந்தேதி மற்றும் 15-ந்தேதி அதிகாலை 5.40 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07134) இடையே ஜனவரி 9-ந்தேதி மற்றும் 16-ந்தேதி இரவு 7.35 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* காச்சிகுடா-கொல்லம் (07053) இடையே ஜனவரி மாதம் 9-ந்தேதி மாலை 6.30 மணிக்கும், மறுமார்க்கமாக கொல்லம்-காச்சிகுடா (07054) இடையே ஜனவரி 11-ந்தேதி அதிகாலை 6 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும்.
* செகந்திராபாத்-ராமேசுவரம் (07685) இடையே ஜனவரி 13, 20, 27-ந்தேதி, பிப்ரவரி மாதம் 1, 8, 15, 22-ந்தேதி மற்றும் மார்ச் மாதம் 1, 8, 15, 22, 29-ந்தேதிகளில் இரவு 9.25 மணிக்கும், மறுமார்க்கமாக ராமேசுவரம்-செகந்திராபாத் (07686) இடையே ஜனவரி 13, 20, 27-ந்தேதி, பிப்ரவரி 3, 10, 17, 24-ந்தேதி மற்றும் மார்ச் 3, 10, 17, 24, 31-ந்தேதிகளில் இரவு 11.55 மணிக்கும் சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.