Categories
தேசிய செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்வார்கள். அதன்பிறகு தற்போது வரும் கார்த்திகை, மார்கழி மற்றும் தை ஆகிய 3 தமிழ் மாதங்களிலும் ஐயப்பன் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் பட்சத்தில் ஒரே ஒரு விரைவு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக தாம்பரம் பகுதியில் இருந்து செங்கோட்டை பகுதிக்கு அந்தியோதயா ரயில் இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இதுவரை ரயில் இயக்கப்படவில்லை. இந்நிலையில் தென்னக ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள எழும்பூர் பகுதியில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி போன்ற கிழமைகளில் சென்னையில் இருந்து கொல்லத்திற்கு இயக்கப்படும். மேலும் கொல்லத்திலிருந்து செவ்வாய், வியாழன் மற்றும் சனி போன்ற கிழமைகளில் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |