Categories
மாநில செய்திகள்

சபரிமலை செல்ல வாடகைக்கு அரசு பேருந்துகள்…. இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்…. முக்கிய அறிவிப்பு …!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை  தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 10க்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு பேருந்துகளில் 10% கட்டண சலுகை வழங்கப்படுகிறது. 40 பேருக்கும் மேல் குழுவாக செல்வதாக இருந்தால், விரைவு பேருந்துகளை குறைந்த வாடகைக்கு எடுத்துச்செல்லலாம். பேருந்துகளை வாடகைக்கு எடுக்க 9445014424 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்

Categories

Tech |