Categories
தேசிய செய்திகள்

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்…. பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம் என்றஆணையத்தின் முடிவு மண்டல பூஜை காலத்தில் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது .41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நவம்பர் 11ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.கட்டாயம் ஆன்லைன் தரிசனம் முன்பதிவு நடைமுறைக்கு வரும்போது பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிட முடியாது. தற்போது தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதை தேவசம்போர்டு கட்டாயமாகியுள்ளது.

ஆனால் புதிய விதி பக்தர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக குற்றம் சாட்டி பல சங்கங்கள் இந்த நடவடிக்கைக்கு எதிராக வந்தன. இருந்தாலும் இந்த முடிவு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.முன்பதிவு ஒரு மெய் நிகர் வரிசை அமைப்பு என்று அழைக்கப்பட்டாலும் கொரோனா காலத்தைப் போல பக்தர்களுக்கு தரிசனத்திற்கு முன்னுரிமை கிடையாது. ஆன்லைன் புக்கிங் வசதியை அணுக முடியாதவர்களுக்கு ஸ்டார் புக்கிங் வசதியும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |