Categories
தேசிய செய்திகள்

சபரிமலை : “நடிகர் சிரஞ்சீவி இளம்பெண்ணுடன் சுவாமி தரிசனம்..??” பெரும் பரபரப்பு…!!

கடந்த 13 ஆம் தேதி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி சபரிமலைக்கு சுவாமி தரிசனத்திற்காக வந்துள்ளார். அப்போது நடிகர் சிரஞ்சீவியுடன் அவரது மனைவி மற்றும் பீனிக்ஸ் குரூப் உரிமையாளர்களான சுக்கப்பள்ளி சுரேஷ், சுக்கப்பள்ளி கோபி அவர்களது மனைவிகளும் வந்திருந்தனர். இவர்களுடன் 50 வயதை எட்டாத மதுமதி என்ற பெண்ணும் சுவாமி தரிசனத்திற்கு வந்ததாக இணையதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திருவிதாங்கூர் சமஸ்தானம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் ஆனந்தக் கோபன் கூறியிருப்பதாவது, “மதுமதி என்ற பெண் சுவாமி தரிசனம் செய்தது உண்மைதான். ஆனால் அவர் 1966 ஆம் ஆண்டு பிறந்தவர். அவருடைய அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை சரி பார்த்த பிறகே அவர் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார். ஆச்சார முறைப்படி அவர் ஐம்பது வயதை கடந்தவர் ஆதலால் அவர் அனுமதிக்கப்பட்டார். தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என அவர் கூறினார்.

Categories

Tech |