சித்திரை விஷு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்டது. அதில் நேற்று சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடந்தன. இந்நிலையில் தினமும் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஏப்ரல் 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இன்று முதல் ஏப்ரல் 18-ஆம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஏப்ரல் 18-ஆம் தேதி பூஜை முடிந்து இரவு 10 மணிக்கு நடை சாற்றப்படும். மேலும் கோவிலில் பூஜைகள் கட்டணம் மற்றும் பிரசாத கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு ஐயப்ப பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories