Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு அன்னதான ஸ்பெஷல்…. தேவசம் போர்டு அறிவிப்பு….!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களில் இதுவரை 4 1/4 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு உள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. தினசரி சராசரியாக 22 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் மூலம் பயன்பெறுகின்றனர். காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரை உப்புமா, பருப்பு சாதம் மற்றும் சுக்குநீர் வழங்கப்படுகிறது. பின்னர் பகல் 12 மணி முதல் 3:30 மணி வரை புலாவ், சாலட், சுக்குநீர் வழங்கப்படுகிறது. அதன் பிறகு மாலை 6.30 மணி முதல் இரவு 11.15 மணி வரை கஞ்சி மற்றும் சிறு பயிறு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Categories

Tech |