Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு குட்நியூஸ்….. தேவசம்போர்டு சூப்பர் அறிவிப்பு….!!!!

மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாள்தோறும் கூடுதலாக ஒரு மணி நேரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளித்து தேவசம்போர்டு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தினமும் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இந்நிலையில் நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தனர். இதையடுத்து பக்தர்கள் நலனைக் கருதி இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இரவு 10.55 மணியளவில் ஹரிவராசனம் பாடி 11 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மகரவிளக்கு பூஜை ஜனவரி 19ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதுவரை தினமும் அதிகாலை 4 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அய்யப்ப பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |